Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாட்டில் #VoterList திருத்தப் பணிகள் - சிறப்பு முகாம் தேதி மாற்றம்!

08:21 AM Oct 29, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம் நாட்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யப்படுகிறது. அதன்பின் ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அந்த வகையில், இந்தாண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் இன்று தொடங்குகிறது. இதை முன்னிட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

தொடர்ந்து, இன்று முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் திருத்தம் செய்தல் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மற்றும் செயலி வாயிலாகவும் விண்ணப்பங்களை வழங்கலாம். நேரடியாக வாக்காளர் பதிவு அதிகாரியிடமும் உரிய படிவங்களை பெற்று விண்ணப்பிக்கலாம். இதுதவிர, பணியாற்றுவோர் வசதிக்காக, 4 வார இறுதி நாட்களில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 69,000 திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில், சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

இதையும் படியுங்கள் : Diwali பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய பென்னாகரம் ஆட்டுச் சந்தை | ரூ.5 கோடிக்கு விற்பனை!

முன்னதாக, இந்திய தேர்தல் ஆணையத்தால் நவ. 9, 10 மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கும் என அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், நவ.9ம் தேதி தமிழ்நாடு அரசால் பணி நாளாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சிறப்பு முகாம் நாட்களில் நவ 9 மற்றும் 10ம் தேதிக்குப் பதில், நவ.16, 17 ஆகிய இரு நாட்களுக்கு முகாம் நடைபெறும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.

Tags :
DraftElectoral rollECINews7Tamilnews7TamilUpdatesSpecial Camptamil naduVoter List
Advertisement
Next Article