Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சாலை விபத்தில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் - முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு!

சாலை விபத்தில் உயிரிழந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
01:37 PM Mar 26, 2025 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலை விபத்தில் உயிரிழந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வளமாக்கி ஆறுதல் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

Advertisement

"விழுப்புரம் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்துவந்த தமிழ்ச்செல்வன் (வயது 57) என்பவர் கடந்த 13.3.2025 அன்று பணியின் நிமித்தமாக இருசக்கர வாகனத்தில் மாவட்ட காவல் அலுவலகம் எதிரில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நான்குசக்கர வாகனம் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 24.3.2025 அன்று மாலை உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

சிறப்பு உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். தமிழ்ச்செல்வனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு முப்பது இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
announces financialAssistanceCHIEF MINISTERinspectorRoad accident
Advertisement
Next Article