Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விம்பிள்டன் டென்னிஸ்: 2-வது சுற்றுக்கு அல்கராஸ், பாலினி முன்னேற்றம்!

08:57 AM Jul 02, 2024 IST | Web Editor
Advertisement

விம்பிள்டன்டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர்  தங்களது பிரிவில் முதல் சுற்றில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேற்றமடைந்தனர்.

Advertisement

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நேற்று கோலாகமாகத் தொடங்கியது.இதில், ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில், உலகின் 3-ஆம் நிலை வீரரான அல்கராஸ் 7-6 (7/3), 7-5, 6-2 என்ற நேர் செட்களில் எஸ்டோனியாவின் மார்க் லஜாலை வீழ்த்தினார். போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் மெத்வதெவ் 6-3, 6-4, 6-2 என்ற செட்களில், அமெரிக்காவின் அலெக்ஸாண்டர் கோவாசெவிக்கை தோற்கடித்தார்.

10-ஆம் இடத்திலிருக்கும் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் 6-3, 6-4, 7-5 என, செர்பியாவின் டுசான் லஜோவிச்சை வெளியேற்றினார். இதனிடையே, 22-ஆம் இடத்திலிருந்த பிரான்ஸின் அட்ரியன் மன்னரினோ, 18-ஆவது இடத்திலிருந்த ஆா்ஜென்டீனாவின் செபாஸ்டியன் பேஸ், 19-ஆம் இடத்திலிருந்த சிலியின் நிகோலா ஜேரி ஆகியோர் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தார்.

இதையும் படியுங்கள் : லியான் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி : 10வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் விஸ்வநாதன் ஆனந்த்!

இப்போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், தரவரிசையின் 7-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி 7-5, 6-3 என்ற கணக்கில் ஸ்பெயினின் சாரா சொரைப்ஸ் டோர்மோவை வெற்றி பெற்றார். 9-ஆம் இடத்திலிருக்கும் கிரீஸின் மரியா சக்காரி 6-3, 6-1 என அமெரிக்காவின் மெகார்ட்னி கெஸ்லரை தோற்கடித்தார். 14-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டரியா கசாட்கினா 6-3, 6-0 என சீனாவின் ஷுவாய் ஜாங்கையும், 28-ஆம் இடத்திலிருக்கும் உக்ரைனின் டயானா யாஸ்ட்ரெம்ஸ்கா 6-1, 7-6 (7/1) என ஆா்ஜென்டீனாவின் நாடியா பொடொரோஸ்காவையும் வென்றனர்.

Tags :
Carlos AlgarazCategoryfirst roundItalyJasmine PaliniSpainwon
Advertisement
Next Article