சோதனையின் போது வெடித்துச் சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்
டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனராக உள்ள எலான் மஸ்க், மேலும் பல்வேறு நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இதில் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் விண்வெளி ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் 36 ராக்கெட் இன்று (ஜுன் 19) சோதனைக்கு திட்டமிடப்பட்டிருந்தது. ராக்கெட்டின் பூஸ்டரை பத்திரமாக தரையிறக்கும் நோக்கத்துடன் ஸ்பேஸ்எக்ஸ் சோதனையை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படியுங்கள் : “ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கத்தை திரும்பப்பெறப் போவதில்லை” – உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
இந்த நிலையில் ராக்கெட்டை சோதனை செய்வதற்கு சற்று நேரத்துக்கு முன்பாக என்ஜின் இயக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக ராக்கெட் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் அப்பகுதி முழுவதும் தீப்பிழம்பாகவும் புகைமூட்டமாகவும் காணப்பட்டது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனையடுத்து ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த இந்த ஸ்டார்ஷிப் விண்கலத்தை வருகிற ஜூன் 29 ஆம் தேதி ஸ்பேஸ்எக்ஸ் விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.