Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஸ்பேஸ் பயோனீர் நிறுவனம் ஏவிய ராக்கெட் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய விவகாரம்! விமர்சனங்களுக்கு நக்கலாக பதில் அளித்த எலான் மஸ்க்!

03:49 PM Jul 10, 2024 IST | Web Editor
Advertisement

ஸ்பேஸ் பயோனீர் நிறுவனம் ஏவிய ராக்கெட் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய விவகாரம் விமர்சனத்திற்கு ஆளான நிலையில், இதற்கு அந்நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ள பதில் பல்வேறு கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

Advertisement

சீனாவில், எலான் மஸ்கின் ஸ்பேஸ் பயோனீர் என்ற நிறுவனம் உருவாக்கிய விண்வெளி ராக்கெட் ஒன்று சோதனையின் போது, தானாகவே விண்ணில் பாய்ந்த நிலையில், சில நொடிகளிலேயே அது செயலிழந்து கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இந்நிகழ்வு நடந்த நிலையில், மத்திய சீனாவில் உள்ள கோங்கி மலைப் பகுதிகளில், அந்த ராக்கெட் விழுந்து நொறுங்கிய காட்சிகள் வெளியாகி சர்ச்சையாகியது. முன்னதாகவே அப்பகுதியில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இது குறித்து ராக்கெட் நிறுவனமாக ஸ்பேஸ் பயனீா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:

தியான்லாங்-3 ராக்கெட்டை நிலையாகப் பொருத்தி சோதனை நடத்தப்பட்டது. ஆனால், கட்டமைப்பு கோளாறு காரணமாக அந்த ராக்கெட் எதிா்பாராத விதமாக விண்ணில் பாய்ந்தது. எனினும், அது மக்கள் வசிக்காத மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியதால் யாரும் காயமடையவில்லை என்று அந்த நிறுவனம் தெரிவித்தது. விபத்தைச் சந்தித்த தியான்லாங்-3 ராக்கெட்தான் சீனாவின் அதிக சக்திவாய்ந்த ராக்கெட் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், கோங்கி மலையின் அடர்ந்த வனப்பகுதியில் இருந்த பறவைகள், விலங்குகள் இவ்விபத்தில் உயிரிழந்ததாக விமர்சனம் எழுந்தது.

குறிப்பாக, பத்திரிகையாளர் மைக் பெஸ்கா, ஸ்பேஸ் பயோனீர் நிறுவனத்தின் ராக்கெட் விழுந்து நொறுங்கியதால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விரிவாக எழுதியது, பல்வேறு பிரபல பத்திரிகைகளில் வெளியானது.

இந்த நிலையில், இந்த விமர்சனங்களுக்கு ஸ்பேஸ் பயோனீர் நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் தனது ட்விட்டர் (X) தள பக்கத்தில் பதில் இன்றை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் குற்றச்சாட்டுகளுக்கு பரிகாரமாக ஒரு வாரம் தான் ஆம்லேட் உண்ணாமல் தவிர்க்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.

தன் நிறுவனம் மீதான கடுமையான விமர்சனத்திற்கு நக்கலாக எலான் மஸ்க் தெரிவித்திருக்கும் பதில்லுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். இதனால் எலான் மஸ்கின் பதிவு வைரலாகி வருகிறது.

Tags :
elon muskHeinous crimeHilarious CommentMike PescaNestsnews7 tamilNews7 Tamil UpdatesOmelettePostspacex
Advertisement
Next Article