Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மழையால் உயிரிழந்த கால்நடைகள்: 8 நாட்களாகியும் அப்புறப்படுத்தப்படாததால் துர்நாற்றம் என பொதுமக்கள் புகார்!

11:17 AM Dec 26, 2023 IST | Web Editor
Advertisement

திருச்செந்தூரில் மழை வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்டு உயிரிழந்த கால்நடைகள் 8 நாட்களாகியும் அப்புறப்படுத்தப்படாததால், அப்பகுதியில், துர்நாற்றம் வீசுகிறது. 

Advertisement

தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தென்மாவட்டங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. பல பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கியும், மின்சாரம் தாக்கியும் மக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் வீடுகளை இழந்தும், கால்நடைகளை இழந்தும் தவித்து வருகின்றனர்.

இதனையடுத்து, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் பகுதிகளில் ஏற்பட்ட கனமழையின் வெள்ளத்தால்,  67 மாடுகள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டுள்ளன. 135 கன்றுகுட்டிகள் இறந்துள்ளன. 28,392 கோழிகள் இறந்துள்ளன.

இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டில் இன்று மட்டும் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் தண்ணீர் குறைந்த நிலையில் உயிரிழந்த
கால்நடைகள் ஆங்காங்கே உடல் சிதைந்து அழுகிய நிலையில் காணப்படுகிறது.
திருச்செந்தூர் -சாத்தான்குளம் சாலையில் வடிகால்களின் ஓரம் கால்நடைகளின்
உடல்கள் அழுயிய நிலையில் ஒதுங்கிக்கிடக்கிறது. இதனால் அப்பகுகுதிகளில் பெரும் துர்நாற்றம் வீசுவகிறது.

இதனால், அப்பகுதி வழியே செல்லக்கூடிய பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கால்நடைகளின் உடல்கள் அழுகிய நிலையில் சிதைந்து கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதுதொடர்பாக திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும் அப்புறப்படுத்தப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :
cowsdeathFloodHeavyRainsouthtnrainThiruchendurthuthukoodi
Advertisement
Next Article