Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தென்கொரியா | அதிபரை தொடர்ந்து இடைக்கால அதிபர் ஹான் டக்- சூவும் பதவி நீக்கம்!

05:25 PM Dec 27, 2024 IST | Web Editor
Advertisement

தென்கொரியாவின் இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்ட ஹான் டக்- சூவும் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

Advertisement

தென்கொரியாவில் கடந்த 3-ஆம் தேதி அதிபர் யூன் சுக்-இயோல் திடீரென ராணுவ அவசர நிலையை பிரகடனப்பட்டுத்தினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். மக்களின் கடும் எதிர்ப்பாலும் அவசர நிலை வாபஸ் பெறப்பட்டது. அதனைத்தொடர்ந்து தென்கொரிய அதிபரை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தை, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்தனர்.

அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ஆளுங்கட்சியினர் புறக்கணித்ததால், தீர்மானம் தோல்வி அடைந்தது. தொடர்ந்து 2-வது முறையாக அதிபருக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் மொத்தமுள்ள 300 எம்பிக்களில் 204 பேர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து, அதிபர் யூன் சுக்-இயோல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இடைக்கால அதிபராக பிரதமர் ஹான் டக்-சூ நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஹான் டக்-சூவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானமும் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த தீர்மானம் 192-0 என்ற அடிப்படையில் அதிகபட்ச ஆதரவை பெற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில், ஆளுங்கட்சி எம்.பி.க்கள் வாக்கெடுப்பை புறக்கணித்தனர். தொடர்ந்து இடைக்கால அதிபர் ஹான் டக்- சூவும் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

ஹானை பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நிதியமைச்சரும், துணைப் பிரதமருமான சோய் சாங்-மோக் இப்போது தற்காலிக அதிபராக உள்ளார்.

Tags :
Acting PresidentHan Duck-sooparliamentSouth Korea
Advertisement
Next Article