Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் - கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா அதிரடி சதம்..!

10:00 PM Feb 04, 2024 IST | Web Editor
Advertisement

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து சார்பில் களமிறங்கிய கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா இருவரும் சதம் அடித்து அசத்தினர்.

Advertisement

தென்னாப்பிரிக்க அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று (பிப். 04) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதையும் படியுங்கள் ; “சின்னவர்னு என்னை கூப்பிடாதீங்க..!” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லாதம், டெவான் கான்வே ஆகியோர் பேட்டிங் செய்தனர். இதில் லாதம் 20 ரன், கான்வே 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, கேன் வில்லியம்சன் மற்றும் ரச்சின் ரவீந்திரா இணைந்து விளையாடினர்.

இந்நிலையில், கேன் வில்லியம்சன் மற்றும் ரச்சின் ரவீந்திரா சிறப்பாக விளையாடி நியூசிலாந்து அணிக்காக ரன்களை குவித்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

Tags :
CenturyCricketKane williamsonNew ZealandRachin RavindraSA vs New zealandSAvsNZSouth Africatest match
Advertisement
Next Article