Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நான் பிரதமராகாததற்கு யார் காரணம்? | பிரணாப் முகர்ஜி வெளியிட்ட பரபரப்பு தகவல்...

11:04 AM Dec 06, 2023 IST | Web Editor
Advertisement

தான் பிரதமராகாததற்கு சோனியா காந்தியே காரணம் என முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். 

Advertisement

2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரிய கட்சியாக உருவெடுத்தது.  கட்சித் தலைவர் என்ற முறையில், சோனியா காந்தி பிரதமராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால்,  இத்தாலி குடியுரிமை காரணமாக அவர் பிரதமராக பதவியேற்க  கூடாது  என பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  அப்போது,  சோனியா காந்திக்கு கூட்டணிக் கட்சிகளின் முழு ஆதரவு இருந்தும்,  பிரதமர் பதவி வேண்டாம் என்று அறிவித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,  சொந்தக் கட்சியில் இருந்து மன்மோகன் சிங்கை பிரதமராக அறிவித்தார்.  இது அப்போது அனைவருக்கும் ஆச்சரியம் அளித்தது.

’பிரதமர் பதவிக்கான போட்டியிலிருந்து சோனியா காந்தி விலகும் முடிவுக்குப் பின்னர், ஊடகங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் தீவிர ஊகங்கள் எழுந்தன.  டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் பிரணாப் ஆகியோரின் பெயர்கள் இந்தப் பதவிக்கு வலுவான போட்டியாளர்களாக விவாதிக்கப்பட்டன.

இந்நிலையில், ​​'சோனியா காந்தி என்னை பிரதமராக்க மாட்டார்' என, தன் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜியிடம் கூறியிருந்ததாகவும்,  பிரதமர் பதவிக்கான போட்டியிலிருந்து சோனியா காந்தி விலகிய பிறகு,  தனது தந்தையுடன் பேசிய தொலைபேசி உரையாடலை ஷர்மிஸ்தா தனது புத்தகமான 'இன் பிரணாப், மை ஃபாதர்: எ டாட்டர் ரிமபர்ஸ்' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புத்தகத்தில், காங்கிரஸின் செய்தித் தொடர்பாளராக இருந்த ஷர்மின்ஸ்தா,  தனது தந்தையின் அரசியல் வாழ்க்கையில் இதுவரை அறியப்படாத சில புதிய சம்பவங்களையும் வெளிப்படுத்தியுள்ளார்.

பிரணாப் முகர்ஜி இந்தியாவின் நிதி அமைச்சராகப் பணியாற்றினார்.  மேலும் அவர் வெளியுறவு,  பாதுகாப்பு,  நிதி மற்றும் வர்த்தக அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.  அவர் இந்தியாவின் 13 வது ஜனாதிபதியாக இருந்தார் (2012 முதல் 2017 வரை). பிரணாப் முகர்ஜி ஆகஸ்ட் 31, 2020 அன்று 84வது வயதில் காலமானார்.

Advertisement
Next Article