Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"தமிழ்நாட்டில் உள்ள சில எதிர்க்கட்சிகள், தமிழ்நாட்டிற்கே எதிரிக் கட்சிபோல செயல்படுகின்றன" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாட்டில் உள்ள சில எதிர்க்கட்சிகள் பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்படாமல் தமிழ்நாட்டிற்கே எதிரிக்கட்சி போல செயல்படுகின்றன என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
01:16 PM Apr 18, 2025 IST | Web Editor
Advertisement

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த ஆண்டார்குப்பத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (ஏப்.18) நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, ரூ.418.15 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், ரூ.390.74 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.357.43 கோடி மதிப்பில் 2 லட்சத்து 2 ஆயிரத்து 531 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

Advertisement

பின்னர் விழா மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

"பல்வேறு திட்டங்களை திமுக ஆட்சியில் வழங்கி வருகிறோம். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் முடங்கிக்கிடந்த உட்கட்டமைப்பு பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் 63 ஆயிரத்து 124 பேருக்கு பட்டா வழங்கப்படுகிறது. நாட்டிற்கே முன்னோடியாக பல்வேறு திட்டங்களை திமுக அரசு செய்து வருகிறது. திமுக ஆட்சியில் தன்னம்பிக்கையும் வளர்ந்துள்ளது, தமிழ்நாடும் வளர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சில எதிர்க்கட்சிகள் பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்படாமல் தமிழ்நாட்டிற்கே எதிரிக்கட்சி போல செயல்படுகின்றன.

தமிழ்நாட்டிற்கும் , தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிரானவர்களோடு உறவாடி தமிழ்நாட்டை அடகுவைக்கும் எண்ணத்தை கொண்டுள்ளனர். நீட் தேர்வு எதிர்ப்பு, மும்மொழி திட்டம் நிராகரிப்பு, வக்பு திருத்தச்சட்ட எதிர்ப்பு, தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மாநிலங்களை ஒன்று திரட்டுதல் போன்றவற்றில் நாம்தான் இந்திய அளவில் வலுவாக குரல் கொடுத்து வருகிறோம்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்துதான் தமிழ்நாடு போராடுகிறது. மாநிலங்களின் உரிமைகளை கேட்பது தவறா? ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றோம். இதுதான் திமுகவின் சக்தி. நீட் தேர்வில் விலக்கு தருவோம் என்று அமித்ஷா கூற முடியுமா? இந்தியை திணிக்கமாட்டோம் என்று கூற முடியுமா? தமிழ்நாட்டிற்கு இவ்வளவு சிறப்பு நிதியை கொடுத்துள்ளோம் என்று பட்டியல் போட முடியுமா? தொகுதி சீரமைப்பால் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையாது என்று வாக்குறுதி கொடுக்க முடியுமா?

எவ்வளவு கொடுத்தாலும் இங்கு அழுகின்றனர் என்று பிரதமர் மோடி கூறினார். நாங்கள் கேட்பது அழுகையல்ல, தமிழ்நாட்டின் உரிமை. நான் அழுது புலம்புவன் அல்ல. உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம். டெல்லி ஆளுகைக்கு தமிழ்நாடு என்றுமே அடிபணியாது. தமிழ்நாடு தனித்தன்மை கொண்டது. 2026-லும் திராவிட மாடல் ஆட்சிதான். தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான்"

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Tags :
cm stalinCMO TAMIL NADUDMKMK Stalinnews7 tamilNews7 Tamil UpdatesTN Govt
Advertisement
Next Article