இவ்வளவு Easy ஆ? | புகழ்பெற்ற MIT கல்வி நிறுவனத்தின் 1869-ம் ஆண்டு #QuestionPaper இணையத்தில் வைரல்!
புகழ்பெற்ற எம் ஐ டி கல்வி நிறுவனத்தின் 1869ம் ஆண்டிற்கான நுழைவுத் தேர்வுக்கான கேள்வித் தாள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்க நாட்டில் கேம்பிரிட்ஜில் செயல்படும் கல்வி நிறுவனம் எம் ஐ டி என அழைக்கப்படும் மாசசூசெட்சு தொழில்நுட்பக் கழகமாகும். புகழ்பெற்ற இந்த கல்வி நிறுவனம் 1861ல் தொடங்கப்பட்டது. 163 வருட பாரம்பரிய இந்த கல்வி நிறுவனம் நவீன தொழிழ்நுட்பம் மற்றும்
அறிவியலின் பல துறைகளின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது.
பொறியியல், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை படிப்பதற்கு பலரும் நாடும் இந்த கல்வி நிறுவனத்தில் படித்தவர்கள் தான் அதிகளவில் நோபல் பரிசுகளை பெற்றுள்ளனர். கிட்டதட்ட 101 நோபல் பரிசு பெற்றவர்களும், 8 பீல்ட்ஸ் மெடல் பெற்றவர்களும் இந்த கல்வி நிறுவனத்தில் படித்தவர்கள்.
இந்த கல்வி நிறுவனத்தில் படிப்பதற்கு விண்ணப்பிக்கும் எண்ணிக்கையில் வெறும் 4% மட்டும் சேர்க்கைக்கு தேர்வாகிறார்கள். அந்த அளவுக்கு நுழைவுத் தேர்வு முறை மிகவும் கடினமாக இருப்பதாக தேர்வர்கள் கூறுவதுண்டு. இந்த நிலையில் எம் ஐ டி கல்வி நிறுவனத்தின் 1869ம் ஆண்டு நுழைவுத் தேர்வு வினாத்தாள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்த வினாத்தாள் குறித்து இணையவாசிகள் பலரும் கேள்விகள் மிகவும் சுலபமாக உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள கணக்கு பாடத்தின் கேள்விகள் கால்குலேட்டர் இல்லாமலேயே மிக எளிமையாக விடை கண்டுபிடித்து விடலாம் என நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்.