Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஓசூரில் கடும் பனிப்பொழிவு - வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி!

10:10 AM Jan 13, 2024 IST | Web Editor
Advertisement

ஓசூர் பகுதியில் அதிகாலையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்காளாகினர்.

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர், கெலமங்கலம், தேக்கநிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பனிப்பொழிவு எப்போதும் அதிகமாகவே காணப்படும். தற்போது ஓசூர் பகுதியில் தொடர்ச்சியாக காணப்பட்டு வரும் பனிப்பொழிவால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

ஓசூர் பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர்,  டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கடுமையான குளிர் காணப்படும்.  அவ்வப்போது கடுமையான பனிப்பொழிவும் ஏற்படும். அந்த வகையில் ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பனிப்பொழிவு சற்று அதிகமாகவே காணப்படுகிறது.

இதையும் படியுங்கள் : புழல் ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து – பல மணி நேரமாக போராடும் வீரர்கள்!

இந்த பனிப்பொழிவு ஜனவரி மாதமான தற்போதும் தொடர்ந்து வரும் நிலையில், இன்று அதிகாலை முதலே சாலைகளில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இந்நிலையில், மூடு பணியின் காரணமாக எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பணி பொழிவு காணப்படுவதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்குகின்றனர். அதேபோல காலை நேரத்தில் நடை பயிற்சிக்கு சென்ற பொதுமக்கள்,என பலரும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டனர்.

Tags :
HosurKrishnagiridistrictsnowdaysSnowFallTamilNadu
Advertisement
Next Article