"மாதவிடாய் குறித்து ஸ்மிருதி இரானியின் பதில் சற்று பயமாகத்தான் இருக்கிறது" - பிஆர்எஸ் எம்பி கவிதா
மாதவிடாய் குறித்து ஸ்மிருதி இரானியின் பதில் சற்று பயமாகத்தான் இருக்கிறது என பிஆர்எஸ் எம்பி கவிதா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிச.4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் (டிச. 13) நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் மனோஜ் குமார் ஜா, நாட்டில் மாதவிடாய் சுகாதாரக் கொள்கை குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அளித்த பதில் பெரும் சலசலப்பையும் ஏற்படுத்தியது.
மேலும் மாதவிடாய் இல்லாத ஒருவருக்கு மாதவிடாய் குறித்து ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டம் இருப்பதால் பெண்களுக்கு சம வாய்ப்பு மறுக்கப்படுகிறது" என்றும் அவர் விளக்கமளித்திருக்கிறார்.
” மாதவிடாய் குறித்த கேள்விக்கு மாநிலங்களவையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அளித்த பதில் அதிருப்தி அளிக்கிறது. ஒரு பெண்ணாக, இதுபோன்ற அறியாமையை காண்பது சற்று பயமாகத்தான் இருக்கிறது.
ஒரு பெண்ணாக, பெண்கள் எதிர்கொள்ளும் உண்மையான சவால்கள் மற்றும் எல்லாவற்றிற்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் ஆகியவற்றிற்கு உரிய அங்கீகாரம் இல்லாததைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. கொள்கை உருவாக்கத்திற்கும் யதார்த்தத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை இது காட்டுகிறது” என பிஆர்எஸ் எம்பி கவிதா தெரிவித்துள்ளார்.