Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சின்ன சின்ன கண்கள்.... விஜய் - பவதாரிணி குரலில் வெளியான GOAT திரைப்படத்தின் 2-ஆவது சிங்கிள்!

06:31 PM Jun 22, 2024 IST | Web Editor
Advertisement

விஜய் நடிக்கும் 'The Greatest Of All Time' திரைப்படத்தின் 2-ஆவது பாடலான 'சின்ன சின்ன கண்கள்' வெளியாகி உள்ளது.

Advertisement

லியோ படத்தைத் தொடர்ந்து விஜயின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (G.O.A.T. – Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.  இதில் நடிகர்கள் ஜெயராம்,  பிரபு தேவா,  மோகன்,  பிரசாந்த்,  வைபவ்,  சினேகா,  லைலா,  மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதற்கிடையே விஜய் பாடிய முதல் பாடல் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.  இதனையடுத்து இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில், 2வது பாடலான ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என முன்னதாக அறிவித்து, அதன் புரோமோவை படக்குழு நேற்று வெளியிட்டது.

இதையும் படியுங்கள் : நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட விவகாரம்! 1563 பேருக்கு நாளை மறுதேர்வு!

அதன்படி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கும் அந்த ‘சின்ன சின்ன கண்கள் பாடல் ‘ பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது.  இந்த பாடலை விஜய் மற்றும் மறைந்த பாடகி பவதாரிணி குரலில் உருவாகியுள்ளது. கபிலன் வைரமுத்து இந்தப் பாடலை எழுதியுள்ளார்.  1997ஆம் ஆண்டு வெளியான காதலுக்கு மரியாதை படத்துக்குப் பிறகு பவதாரணி - விஜய் குரல்கள் இணைந்து இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ளதும் ரசிகர்களிடம் வரவேற்பினைப் பெற்று வருகிறது.

Tags :
ChinnaChinnaKangalgoatHappyBirthdayVijayHBDHBDThalapathyVijayTamilCinemaTHEGOATTheGreatestOfAllTimevijayVijay50
Advertisement
Next Article