Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#slovakia -வில் வரலாறு காணாத மழை ; குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

08:36 AM Sep 19, 2024 IST | Web Editor
Advertisement

ஐரோப்பாவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் பெய்துள்ள கனமழை, வெள்ளத்தால் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கியதால் மக்கள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

ஸ்லோவேகியாவில் நேற்று கடந்த 12ம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. செக் குடியரசு எல்லையையொட்டி அமைந்துள்ள ஸ்லோவேகியாவின் மேற்கு பகுதிகளில் கடந்த 13ம் தேதி 200 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. கனமழையால் ஸ்லோவேகியா தலைநகர் பிராட்டிஸ்லாவா நகரில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து நேற்றைய (செப்.18) நிலவரப்படி டனுபே ஆற்றில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவாக, நீர்மட்டம் 970 செ.மீ ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து பிராட்டிஸ்லாவா நகரின் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆஸ்திரியா எல்லையையொட்டி அமைந்துள்ள டெவின் மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெவின் மாவட்டத்தில் மட்டும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் 100 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள் : Paramakudi அருகே லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் கைது!

நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மொராவா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் பாய்ந்துள்ளது. வெள்ள பாதிப்புகளால் 20 மில்லியன் யூரோ இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டராபா தெரிவித்துள்ளார். தீயணைப்புத் துறையினரும் மீட்புக் குழுவினரும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபடுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
europeFloodheavyrainsNews7Tamilnews7TamilUpdatesSlovakia
Advertisement
Next Article