Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நடிகைகள் குறித்து அவதூறு - மன்னிப்பு கோரினார் #Kantharaj!

09:55 PM Sep 19, 2024 IST | Web Editor
Advertisement

நடிகைகளை தவறாக விமர்சித்ததற்காக டாக்டர் காந்தராஜ் மன்னிப்பு கோரியுள்ளார்.

Advertisement

கேரளாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தமிழிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை நடந்திருப்பதாக நடிகை ராதிகா உள்ளிட்ட சிலர் கூறினர்.  இதுதொடர்பாக, யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த மருத்துவர் காந்தராஜ், படத்தில் நடிக்கும்போது அனைத்துக்கும் ஓகே சொல்லிவிட்டு, 30 ஆண்டுகளுக்கு பிறகு புகாரளிப்பதாக நடிகைகளை விமர்சித்தார்.

மேலும் நடிகைகள் சிலரது பெயரையும் குறிப்பிட்டு பேசியிருந்த நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நடிகையும், நடிகர் சங்க விசாகா கமிட்டி தலைவரான ரோகிணி சென்னை காவல் ஆணையரகத்தில், ஆன்லைன் வழியாக புகாரளித்தார்.

அந்த புகாரில், ‘டாக்டர் காந்தராஜ் நடிகைகளை மிகவும் கீழ்த்தரமாகவும், பாலியல் தொழிலாளி போலவும் பேசியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது. மறைந்த நடிகைகள் முதல் தற்போதுள்ள நடிகைகள் பற்றி எந்தவித ஆதாரமும் இன்றி பேட்டியளித்துள்ளார். நடிகைகள் என்றால் கேமராமேன், எடிட்டர், மேக்கப் மேன், டைரக்டர் என அனைவரிடமும் அட்ஜஸ்ட்மென்ட் என்ற பெயரில் தான் நடித்து வருகின்றார்கள், என்பது போல பேசியிருப்பது வேதனையளிக்கும் வகையில் உள்ளது.

இதுதவிர கொச்சையான வார்த்தைகளை அவர் பயன்படுத்தி உள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு யூடியூப்பில் உள்ள அவரது பேட்டியை நீக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். ரோகிணியின் புகாரையடுத்து காந்தராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் டாக்டர் காந்தராஜ் மன்னிப்பு கேட்டுள்ளார். “தனியார் தொலைக்காட்சியில் திரைப்பட நடிகைகள் குறித்து நான் கொடுத்த பேட்டி, பல நடிகையர் மனதைப் புண்படுத்தி இருக்கிறது என்பதை அறிகிறேன். யாரையும் காயப்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. இருப்பினும் இந்தப் பேட்டி கொடுத்தற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். உளப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என டாக்டர் காந்தராஜ் தெரிவித்துள்ளார்.

Tags :
ApologizesKantharajRohini
Advertisement
Next Article