Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு | சி.டி.ஆர்.நிர்மல்குமாரின் மனுவை தள்ளுபடி செய்தது #MadrasHighCourt!

03:51 PM Sep 10, 2024 IST | Web Editor
Advertisement

சி.டி.ஆர். நிர்மல்குமாருக்கு விதித்த தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Advertisement

கடந்த ஆண்டு தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த சி.டி.ஆர்.நிர்மல் குமார் ட்விட்டரில் தொடர்ந்து விமர்சித்து வந்தார். தமிழகத்தில் மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை குறித்து முன்னால் அமைச்சர் செந்தில் பாலாஜியை நிர்மல் குமார் விமர்சித்திருந்தார்.

இதையடுத்து, தன்னை குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட நிர்மல் குமாருக்கு தடை விதிக்கக்கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு விசாரணை நடைபெற்றது. அப்போது "செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிடத் தடை விதித்து கடந்த ஆண்டு ஏப்ரல் 12-ந் தேதி உத்தரவிட்டார். பின்னர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்தார்.

இந்த நிலையில், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து நிர்மல்குமார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் நீதிபதி ராஜசேகர் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆதாரங்களை முழுமையாக ஆய்வு செய்து, 2023ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை எனக் கூறி சி.டி.ஆர். நிர்மல் குமாரின் மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.

Tags :
ADMKCTR Nirmal KumarDMK
Advertisement
Next Article