Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

எஸ்.கே.23 : புதிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்!

04:37 PM Jun 14, 2024 IST | Web Editor
Advertisement

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் எஸ்.கே- 23 திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் புதிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'அமரன்' என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.  இதையடுத்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 'எஸ்கே 23' திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நாயகியாக பிரபல கன்னட நடிகை ருக்மணி வசந்தா நடிக்கிறார்.

'துப்பாக்கி' திரைப்படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான வித்யுத் ஜம்வால் இணைந்துள்ளார். 'சார்பட்டா பரம்பரை' திரைப்படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான ஷபீரும் சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் இணைந்துள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

இதையும் படியுங்கள் : திருமங்கலத்தில் ரஜினிகாந்த் சிலை முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்ட கழுகு சிலை!

இந்நிலையில், இதுவரை நடிக்காத மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக தாடியை வளர்த்துள்ளதாகவும் பல தோற்றங்களிலும் வருவாரெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
14 வருடங்களுக்குப் பிறகு பிஜூ மேனன் தமிழில் இந்த  திரைப்படத்தில் மீண்டும் நடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும், சிவகார்த்திகேயனின் புதிய தோற்ற புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Tags :
actorAR MurugadosssivakarthikeyanSK23
Advertisement
Next Article