Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'எஸ்கே23’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

02:12 PM Feb 15, 2024 IST | Web Editor
Advertisement

'எஸ்கே23’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

Advertisement

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியானது ‘தர்பார்’. இப்படத்துக்குப் பிறகு 3 வருடங்களாக படங்களை இயக்காமல் இருந்த முருகதாஸ் தற்போது தனது புதிய படத்தை இயக்குகிறார்.

‘எஸ்கே23’ என அழைக்கப்படும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கிறார். ‘சப்த சாகரதாச்சே எல்லோ’ கன்னட படத்தில் நடித்த ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார்.  இதன் மூலம் அவர் தமிழில் அறிமுகமாகிறார்.  படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தில் மோகன்லால்,  வித்யூத் ஜம்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.  ஆக்‌ஷன் என்டர்டெயினராக படம் உருவாக உள்ளது.  இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு  பூஜையுடன் தொடங்கியுள்ளது.

 

Tags :
Anirudh RavichanderAR Murugadossmovie updatesRukhmini VasansivakarthikeyanSK23
Advertisement
Next Article