Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

SK23 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவக்கம்?

03:16 PM Feb 14, 2024 IST | Web Editor
Advertisement

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (பிப்.14) சென்னையில் துவங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியான ’அயலான்’ திரைப்படம் வெற்றிப் படமாக அமைந்ததுடன் ரூ.90 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  மேலும், ‘அயலான்’  திரைப்படம் ஓடிடியில் வெளியான பின்னர் ரசிகர்களிடம் கூடுதல் வரவேற்பை பெற்றது.

இதையடுத்து,  சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் 21-வது திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் SK21 திரைப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்து வருகிறார்.  இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இத்திரைப்படத்திற்காக உடற்பயிற்சி மேற்கொண்டு தீவிரமாக சிவகார்த்திகேயன் தயாராகி வந்த நிலையில், 6 பேக் வைத்திருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி, பிப்ரவரி 16-ம் தேதி மாலை 5 மணிக்கு SK21 படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.  சிவகார்த்திகேயன் தீவிர உடற்பயிற்சி மேற்கொள்வது போன்ற சிறிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

 

இந்த நிலையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (பிப்.14) சென்னையில் துவங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  அதனுடன் இப்படத்தின் நாயகியாக 'சப்தசாகரச்ச எல்லோ' படத்தில் நடித்த ருக்மணி நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
AR Murugadossmovie updatesRukhmini VasansivakarthikeyanSK23
Advertisement
Next Article