Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Sivakasi | திடீரென வெடித்து சிதறிய லாரி குடோன் | வெளியான அதிர்ச்சித் தகவல்!

11:00 AM Sep 27, 2024 IST | Web Editor
Advertisement

தனியார் லாரி டிரான்ஸ்போர்ட் குடோனில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

விருதுநகர் மாவட்டம், சிவகாசி கிழக்கு காவல் நிலையம் அருகே பாலாஜி மற்றும் ரத்தினசாமி ஆகிய இருவருக்கு சொந்தமான பார்சல்களை வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கும் லாரி டிரான்ஸ்போர்ட் இயங்கி வருகிறது. இந்த டிரான்ஸ்போர்ட் மேலாளராக சிவகாசி
சாட்சியாபுரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரும், சூப்பர்வைசராக சேலம்
மேட்டூர் பகுதியைச் சேர்ந்த கோகுல் பணியாற்றி வருகின்றனர்.

இந்த சூழலில், நேற்று முன்தினம் (செப்.25) மாலை வெளியூர்களுக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை லாரிகளில் ஏற்றும் போது திடீரென பட்டாசுகள் வெடித்து சிதறியது. இந்த பயங்கர வெடி விபத்தில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இருப்பினும், ஒரு மினி சரக்கு வாகனம், 16 லட்சத்தி 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 3 இருசக்கர வாகனங்களும் எரிந்து சேதம் அடைந்தன. இந்த வெடி விபத்து குறித்து சிவகாசி விசுவநத்தம் விஏஓ ரவிராஜ் போலீசாருக்கு புகார் அளித்தார். அந்த புகாரில், அரசு அனுமதி இன்றி எளிதில் தீப்பற்றக் கூடிய பட்டாசுகளை லாரியில் ஏற்றுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததால் வெடி விபத்து ஏற்பட்டது என்றும் இதன் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர், சூப்பர்வைசர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Next Article