சிவகார்த்திகேயனின் “அயலான்” பட டிரெய்லர் வெளியானது!
08:19 PM Jan 05, 2024 IST
|
Web Editor
அதிகளவிலான கிராபிக்ஸ் காட்சிகளும், 4,500-க்கும் மேற்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகளும் கொண்டு ஒரு முழு ஆக்ஷன் படமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது. படம் ஜனவரி 12-ம் தேதி வெளியாகும் என படக்குழு சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதனிடையே படத்தின் ட்ரெய்லர் குறித்த அப்டேட் வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் ஜன.5-ம் தேதி அயலான் ட்ரைலர் வெளியிடுவதாக படக்குழு அறிவித்தது.
Advertisement
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அயலான்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisement
‘இன்று நேற்று நாளை’ புகழ் இயக்குநர் ரவிக்குமாரின் 2-வது திரைப்படம் அயலான். நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பான் இந்தியா படமாக வெளிவரவுள்ள இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.
அதன்படி, இன்று 08.06 மணிக்கு ட்ரைலரை படக்குழு வெளியிட்டது. இந்த அறிவிப்பை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ட்ரைலர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Article