Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#SK23 கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டு ஏ.ஆர்.முருகதாஸ்-க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய படக்குழு!

09:08 PM Sep 26, 2024 IST | Web Editor
Advertisement

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK23 படத்தில் வீடியோ கிளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது.

Advertisement

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘அமரன்’ என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் அக்டோபர் 31-ம் தேதி வெளியாகவுள்ளது.  இதையடுத்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘எஸ்கே 23’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நாயகியாக பிரபல கன்னட நடிகை ருக்மணி வசந்தா நடிக்கிறார். இந்த திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.  

இதையும் படியுங்கள் : BengaluruWomanMurderCase-ல் புதிய ட்விஸ்ட்… சந்தேகிக்கப்பட்ட குற்றவாளியும் தற்கொலை – போலீசாரின் அடுத்த நடவடிக்கை என்ன?

இந்நிலையில் 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது எனவும் ஆகஸ்ட் இறுதிக்குள் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடையும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்த திரைப்படம் 2025 பொங்கலுக்கு ரிலீசாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பிஜு மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏ.ஆர் முருகதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு அவரை வாழ்த்தி வீடியோ கிளிம்ப்ஸை வெளியிட்டுள்ளனர். அதில் ஏ.ஆர் முருகதாஸ் ஆக்ஷன், கட் மற்றும் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட பிடி.எஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

Tags :
ARMurugadossMovieUpdateNews7Tamilnews7TamilUpdatesSivakarthikeryanSKSK23TamilCinema
Advertisement
Next Article