"கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்" - அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
"கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்" என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தண்ணீர் தட்டுப்பாட்டை தடுக்கவும் தடையின்றி தண்ணீர் வழங்கவும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி மற்றும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்ஷேனா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.