Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ.50,000 வழங்கப்படும்!" - #Sikkim முதலமைச்சர் அறிவிப்பு!

04:03 PM Aug 25, 2024 IST | Web Editor
Advertisement

முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ.50,000 வழங்கப்படும் என சிக்கிம் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Advertisement

சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு இனி குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ.50,000 வழங்கப்படும் என அந்த மாநிலத்தின் முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் அறிவித்துள்ளார். நேற்று (ஆகஸ்ட் -25ம் தேதி) நடைபெற்ற சிக்கிம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பின்(FLFS) 22-வது ஆண்டு விழாவில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

இதன்படி, ஒரு முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியம் இனி ரூ.22,000-ல் இருந்து, ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இரண்டு முறை அல்லது அதற்கு மேற்பட்ட முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இனி மாத ஓய்வூதியம் ரூ.25,000-ல் இருந்து ரூ.55,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று பிரேம் சிங் தமாங் கூறினார்.

இதையும் படியுங்கள் : மதுரையில் 50 அடி உயர கம்பத்தில் ஏற்றப்பட்ட #TVK கொடி – 1000 பேருக்கு சமபந்தி விருந்து!

சிக்கிம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்புக்கு சிக்கிம் அரசு ஆண்டுக்கு ரூ.20 லட்சம் மானியமாக வழங்கும் என்றும் பிரேம் சிங் தமாங் அறிவித்தார். இந்த நிதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் அவசர மற்றும் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், அவர்களின் ஆதரவு அமைப்பை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Tags :
CHIEF MINISTERFormer MLAmonthly pensionPrem Singh TamangSikkim
Advertisement
Next Article