Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சித்தா OTT ரிலீஸ் ஒத்திவைப்பு -ரசிகர்கள் ஏமாற்றம்...!

02:02 PM Nov 21, 2023 IST | Web Editor
Advertisement

நவம்பர் 17-ம் தேதி சித்தா திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் இந்த படம் வெளியாகவில்லை.

Advertisement

ETAKI ENTERTAINMENT தயாரிப்பில் சித்தார்த், நிமிஷா சஜயன் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘சித்தா’. இந்த படத்தை பண்ணையாரும் பத்மினியும் படத்தின் இயக்குநர் அருண்குமார் எழுதி, இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகரின் இசையில் உருவான இப்படம் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஃபேமிலி ஆடியன்சை கவர்ந்த இப்படத்திற்கு பல்வேறு திரைப் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகளவில் ரூ.25 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சித்தா திரைப்படத்தின் வரவேற்பைக் கண்ட ஓடிடி தளங்கள் இப்படத்தின் வெளியீட்டு உரிமையைப் பெற போட்டிபோட்டன. முடிவில், டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் பெரிய தொகைக்கு சித்தா படத்தை வாங்கியதாகக் கூறப்பட்டது.

ஓடிடியில் ஆயுதபூஜையை முன்னிட்டு ‘சித்தா’ வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நவம்பர் 17-ம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.  ஆனால்  ஓடிடியில் இந்த படத்தை எதிர்பார்த்த நிலையில் இந்த படம் வெளியாகவில்லை. அதற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை.

Advertisement
Next Article