ஐசிசியின் ஜூலை மாத சிறந்த வீரர் விருதை வென்றார் ஷுப்மன் கில்!
ஐ.சி.சி அமைப்பானது ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. அதன்படி ஐ.சி.சி.யானது சமீபத்தில் ஜூலை மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் கொண்ட பரிந்துரை பட்டியலை வெளியிட்டிருந்தது. இந்த பட்டியலில் இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், தென் ஆப்பிரிக்காவின் வியான் முல்டர் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இடம்பெற்றனர். இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் ஜூலை மாத சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார்.
சமீபத்தில் இந்தியா டெஸ்ட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. ரோகித் சர்மாவின் டெஸ்ட் ஓய்வை அடுத்து இளம் வீரரான சுப்மன் கில்லுக்கு டெஸ்ட் கேப்டன் பதவி வழங்கப்பட்டது. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-2 என்ற கணக்கில் தொடர் சமன் செய்யப்பட்டது. இந்த தொடரில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பல்வேறு சாதனைகளை படைத்தார். தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் சுப்மன் கில் 4 சதங்களை விளாசினார். இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத் தியதற்காக, இந்த விருதுக்கு ஷுப்மான் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த விருதினை சுப்மன் கில் ஏற்கனவே 3 முறை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.