சுப்மன் கில் அதிரடி : ஸ்ரேயஷ் சரவெடி - இங்கிலாந்துக்கு கடின இலக்கை நிர்ணயித்த இந்தியா!
இந்தியா – இங்கிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் மற்றும் இரண்டாம் போட்டிகளில் இந்திய அணி வெற்றியை பதித்து தொடரைக் கைப்பற்றியது.
இன்றைய போட்டிக்கான டாஸ் போடப்பட்டதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். நீண்ட நாள்களுக்குப் பிறகு கேப்டன் ரோஹித் சர்மா கடந்த ஆட்டத்தில் சதமடித்து விளாசிய நிலையில் இப்போட்டியில் 1ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து விராட் கோலியுடன் கைகோர்த்த சுப்மன் கில் நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடி சதம் விளாசி அணியின் ரன் எண்ணிக்கையை அதிகப்படுத்தினார். இதேபோல தன் பங்கிற்கு கோலியும் அரை சதம் விளாசி 55ரன்கள் விளாசி ஆதில் ரஷீத் பந்தில் அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து ஸ்ரேயஸ் ஐயருடன் கரம் கோர்த்த சுப்மன் கில் சிறப்பாக விளையாடி 102 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனைத் தொடர்ந்து கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயஷ் ஐயர் ஜோடி அதிரடியாக விளையாடிய நிலையில் ஸ்ரேயஷ் ஐயர் 78ரன்களும், கே.எல்.ராகுல் 40ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். 50ஒவர்கள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 356ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 357ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.