குருத்தோலை ஞாயிறு - 2000த்திற்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள் குறுத்தோலை ஏந்தி பவனி!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு இரண்டு
தேவாலயங்கள் சார்பில் 2000 கிறிஸ்தவர்கள் பங்கேற்று குறுந்தோலை கையில்
ஏந்தியபடி பவனி வந்தனர்.
தவக்காலத்தின் இறுதி வாரம் பரிசுத்த வாரமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த
வாரத்தை ஆரம்பிக்கும் சிறப்பு நிகழ்வாக உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள்
குருத்தோலை ஞாயிறு தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
இயேசு கிறிஸ்து இயேசு கழுதை மேல் அமர்ந்து ஒலிவ மலையில் இருந்து கித்திரோன் பள்ளத்தாக்கின் வழியாக வந்து “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா” என்று முழங்கியபடி எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்புடன் நுழைந்ததை கிறிஸ்தவர்களால் ஆண்டுதோறும் நினைவுபடுத்தும் ஒரு நிகழ்வுதான் குருத்து ஞாயிறு ஆகும். இந்த நிகழ்வை ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் குருத்து ஞாயிறாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தவக்காலத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது.