Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Bengaluru-இல் வசிப்பவர்கள் கன்னடம் கற்க வேண்டுமா? சர்ச்சையாகும் Zoho நிறுவன தலைவரின் கருத்து!

12:45 PM Nov 16, 2024 IST | Web Editor
Advertisement

பெங்களூரில் வசிப்பவர்கள் கன்னடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஜோஹோ நிறுவன தலைவர் ஸ்ரீதர் வேம்பு கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

'இந்தி தேசிய மொழி' என்று எழுதப்பட்டிருந்த டி-சர்ட்களை அணிந்திருந்த இளைஞர்கள் இருவரின் புகைப்படம் இணையத்தில் பரவியது. அந்த புகைப்படத்திற்கு 'பெங்களூரு பயணத்திற்கு சரியான டி-ஷர்ட்' என்று தலைப்பிடப்பட்டிருந்தது. இந்த இடுகைக்கு பதிலளித்த  'ஜோஹோ' நிறுவன தலைவர் ஸ்ரீதர் வேம்பு "நீங்கள் பெங்களூரில் வசிக்கிறீர்கள் என்றால் கன்னடம் கற்றுக் கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

"உங்கள் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், நீங்கள் பெங்களூரில் வசிக்கிறீர்கள் என்றால் கன்னடம் கற்றுக் கொள்ள வேண்டும். உங்கள் குழந்தைகளும் கன்னடம் கற்க வேண்டும். பெங்களூருவில் பல ஆண்டுகள் வாழ்ந்த பிறகு அவ்வாறு செய்யாதது அவமரியாதையானது. சென்னையில் பணிபுரியும் பிற மாநில ஊழியர்கள் தமிழை கற்க முயற்சி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று ஜோஹோ நிறுவன தலைவர் ஸ்ரீதர் வேம்பு பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/svembu/status/1857228135185695172

இந்த பதிவு இணையத்தில் வைரலான நிலையில், அதற்கு பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் எக்ஸ் பயனர் ஒருவர், “மும்பையில் எனக்கு பல கன்னட நண்பர்கள் உள்ளனர். பல ஆண்டுகளாக இங்கு வசிக்கின்றனர். அதில் எவருக்கு ஒரு வார்த்தை கூட மராத்தி பேசத் தெரியாது. நியாயமா?” என்று வாதிட்டார். மற்றொரு நபர், “நீங்கள் இங்கு முதிர்ச்சியடையவில்லை. எந்த மொழியையும், கலாச்சாரத்தையும் அவமரியாதை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆனால் ஒரு மொழியைக் கற்காமல் இருப்பது அவமரியாதையா? தர்க்கம் (லாஜிக்) அங்கேயே இறந்துவிடுகிறது" என்றார்.

வேறு ஒருவர், “கல்கத்தாவில் வசிக்கும் பெரும்பாலான தமிழர்களும் மலையாளிகளும் சரளமாக பெங்காலி பேசுவார்கள். அவர்களில் ஒருவர் எனது ஆங்கிலப் பேராசிரியர் மறைந்த விஸ்வநாதன். விருது பெற்ற நடிகராகவும் இருந்தார். நீங்கள் நீண்ட காலமாக வாழ்ந்தால் உள்ளூர் மொழி பேச்சுவழக்கை நேசிக்கவும். அருமையாக இருக்கிறது,” என்று பகிர்ந்து கொண்டார்.

நான்காவது ஒருவர் எழுதினார், “பெங்களூரில் கன்னடர்களை விட கன்னடர் அல்லாதவர்களையே அதிகம் சந்திக்கிறேன். அவர்களில் 90% பேர், பேசும்போது ஆங்கிலத்தைப் பயன்படுத்துகிறார்கள். பெங்களூருக்குச் செல்லும் ஒருவர் ஆங்கிலத்தை விட கன்னடத்திற்கு முன்னுரிமை கொடுப்பார் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? மொழிகள் புத்தகங்களிலிருந்து கற்றுக் கொள்ளப்படுவதில்லை, அவை சுற்றுப்புறங்களிலிருந்து கற்றுக் கொள்ளப்படுகின்றன" என்றார்.

Advertisement
Next Article