Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“100% விவிபாட் ஒப்புகை சீட்டுகளை எண்ணி தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும்!” - சத்யபிரதா சாஹுவிடம் விசிக கோரிக்கை

01:34 PM Mar 07, 2024 IST | Jeni
Advertisement

100% விவிபாட் ஒப்புகை சீட்டுகளை எண்ணி தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் கோரிக்கை வைத்துள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது :

“ஏற்கனவே இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வருகை தந்தபோது அவரிடம் சமர்ப்பிக்க கோரிக்கை மனுவை தயாரித்திருந்தோம். அப்போது அவரை சந்திக்க முடியவில்லை. அதனை இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை சந்தித்து சமர்ப்பித்திருக்கிறோம். அதில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.

முக்கியமான கோரிக்கையாக, 100% விவிபாட் ஒப்புகை சீட்டுகளை எண்ணி தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம். தேர்தல் நடைபெறுவதற்கான தேதி அறிவிப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த கோரிக்கையை மக்களின் சார்பில் வலியுறுத்த வேண்டியது அவசியமாக உள்ளது.

இன்றும் வட இந்திய மாநிலங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெறுகின்றன. பழைய வாக்குச்சீட்டு முறைக்கே திரும்ப வேண்டும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லு முல்லு செய்வதற்கு ஏராளமான வாய்ப்புள்ளது என்ற அச்சம், பொதுமக்களால், கட்சி சார்பற்ற அமைப்பினரால் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், 2 கட்டமாக விசிக ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இதையும் படியுங்கள் : 100-வது டெஸ்டில் அஸ்வின் | மனைவி, மகள்களுடன் விருது!

மேலும், தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான செலக்ட் கமிட்டியில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெற வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல். அதற்கு எதிராக ஒரு சட்டத்தை பாஜக இயற்றி இருக்கிறது. இது கூடாது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலேயே செலக்ட் கமிட்டி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளோம்”

இவ்வாறு விசிக தலைவரும் எம்.பி.-யுமான திருமாவளவன் தெரிவித்தார்.

Tags :
ChennaiECIElection2024Elections2024LokSabhaElectionParliamentElectionSathyaprathaSahoothirumavalavanVCK
Advertisement
Next Article