Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கான் வீட்டுக்கு நேரில் சென்ற மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே!

03:22 PM Apr 17, 2024 IST | Web Editor
Advertisement

பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். 

Advertisement

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீடு மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள கேலக்சி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது.  கடந்த ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றனர்.  சல்மான் கானுக்கு 'ஒய் பிளஸ்' பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து அவரது வீட்டு முன் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.  துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.  அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வுசெய்தனர்.

இதற்கிடையே,  சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நடத்திய அடையாளம் தெரியாத நபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.  குஜராத்தின் புஜ் பகுதியில் பதுங்கியிருந்த இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.  அவர்கள் எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில்,  நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேற்று நேரில் சென்றார்.  அவர் சல்மான் கான் குடும்பத்தினரை சந்தித்துப் பேசினார்.  அப்போது சல்மான்கான் குடும்பத்தினருக்கு முழு பாதுகாப்பு தருவதாக ஏக்நாத் ஷிண்டே உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

Tags :
Bandrabollywood actorEknath ShindeGalaxy ApartmentMaharashtra chief ministerMumbainews7 tamilNews7 Tamil Updatessalman khan
Advertisement
Next Article