Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜூ - பூஜையுடன் இன்று படப்பிடிப்பு தொடங்கியது!

பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூ இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது!
06:43 PM Mar 26, 2025 IST | Web Editor
Advertisement

தமிழ் சினிமாவில் இளம் நட்சத்திரங்களாக தோன்றி ரசிகர்கள் மத்தியில் ஜொலித்து வருபவர்கள் பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூ. பிரதீப் கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி வெற்றி கண்ட பிறகு, நடிகராக லல் டுடே படத்தில் வெற்றி கண்டார். தொடர்ந்து அவர் நடிப்பில் அண்மையில் வெளியான டிராகன் திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று 100 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

Advertisement

அதே போல் மமிதா பைஜூ, பிரேமலு படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்து, தற்போது விஜய்யுடன் ஜனநாயகன் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். தொடர்ந்து நேற்று(மார்ச்.25) இருவரும் இணைந்து நடிப்பதாக அறிவிப்புகள் வெளியானது.

பிரதீப் ரங்கநாதனின் 4வது படமாக உருவாகும் இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கவுள்ளார். இவர் சுதா கொங்கராவின்  சூரரைப் போற்று  படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று(மார்ச்26) பூஜையுடன் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

Tags :
KeerthiswaranMamitha BaijuPR04Pradeep RanganathanSai abhyankkar
Advertisement
Next Article