Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குற்றாலத்தில் 548 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த காட்டு யானை அதிர்ச்சியூட்டும் சம்பவம்

07:21 PM Dec 14, 2024 IST | Web Editor
Advertisement

குற்றால மெயின் அருவியிலிருந்து நான்கு வயதேயான யானை கீழே விழுந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தென்காசி மாவட்டத்தில் வரலாறு காணாத கனமழையானது கடந்த இரண்டு தினங்களில் கொட்டி தீர்த்து வரும் நிலையில், கடந்த இரண்டு தினங்களில் மட்டும் 230 செமீக்கு மேலாக மழை பெய்துள்ளது. இந்நிலையில், இந்த வரலாறு காணாத மழையின் காரணமாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள், நீர்வீழ்ச்சிகள், அணைகள் உள்ளிட்டவற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால், தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இந்த காட்டாற்று வெள்ளத்தில் ஏராளமான மரங்கள், சிறிய வகை விலங்கினங்கள் அடித்து வரப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது.

அதாவது, 4 வயது யானை ஒன்று அடர் வனப்பகுதிக்குள் இருந்து வெள்ளத்தில் இழுத்து வரப்பட்டு குற்றாலம் மெயின் அருவியிலிருந்து அதாவது சுமார் 548 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து, குற்றாலம் நகரப் பகுதியில் நடுவே உள்ள ஆற்றுப் படுகையில் சுமார் ஒரு கிமீ தூரம் அடித்துச்செல்லப்பட்டு கரை ஒதுங்கியது. அதனைப் பார்த்து அதிர்ச்சடைந்த பொதுமக்கள் இது தொடர்பாக வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த குற்றாலம் வனத்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக தென்காசி, நெல்லை ஒருங்கிணைந்த மாவட்ட வன அதிகாரியிடம் தகவல் தெரிவித்தனர். மருத்துவ குழுவினருடன் விரைந்து வந்த மாவட்ட வன அலுவலர் யானையை உடற்கூறாய்வு செய்ததற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அடர்வனப் பகுதியிலிருந்து வெள்ளத்தில் இழுத்து வரப்பட்ட யானை உயிரிழந்த சம்பவம் இதுவரை நடைபெறாத ஒன்று என வனதுறை அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், குற்றாலத்தின் சுற்றுச்சூழல் தன்மையைப் பாதுகாக்க உயர் நீதிமன்றத்தால் நிரந்தரமாக நியமிக்கப்பட்ட ஆணையருமான வேங்கட ரமணா கூறும் போது, கடந்த 1992-ம் நவம்பர் மாதம் இதே போல் தென்காசி மாவட்டத்தில் வரலாறு காணாத ஒரு மழை பெய்ததாகவும், அதற்கு அடுத்தபடியாக 32 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்த மழை பெய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆனால் அப்போது பெய்த மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் மரங்கள், சிறிய வகை உயிரினங்கள் மட்டுமே அடித்து வரப்பட்ட நிலையில், தற்போது யாரும் எதிர்பாராத வகையில் இதுவரை கேள்விப்படாத ஒரு சம்பவமாகக் குற்றாலம் மெயின் அருவி வெள்ளத்தில் நான்கு வயது மதிக்கத்தக்க யானை ஒன்று இழுத்து வரப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் வருத்தத்தை அழிப்பதாகவும், இதுபோல் ஒரு சம்பவம் என்னுடைய காலத்தில் நான் கேள்விப்பட்டதில்லை எனவும், ஆகவே காட்டு யானைகளை அடர் வனப் பகுதிக்குள் கொண்டு செல்ல வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags :
Elephant DeadkutralamNews7Tamilnews7TamilUpdatesTenkasi
Advertisement
Next Article