Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மகாராஷ்டிராவில் #ShivajiStatue இடிந்த விவகாரம் - எதிர்க்கட்சிகள் போராட்டம்!

04:50 PM Sep 01, 2024 IST | Web Editor
Advertisement

மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி சிலை இடிந்த விவகாரத்தில் ஆளும் கட்சியின் ஊழலைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க்கில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் இருந்த 17 ஆம் நூற்றாண்டின் மராட்டிய சாம்ராஜ்யத்தின் மகாராஜா சத்ரபதி சிவாஜியின் சிலை கடந்த திங்கள்கிழமை 26ம் தேதி பிற்பகல் இடிந்து விழுந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி சத்ரபதி சிவாஜி சிலையைத் திறந்துவைத்திருந்தார். சிலை திறந்து ஓராண்டு ஆவதற்குள் சிலை இடிந்து விழுந்தது.

9 மாதங்களில் சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்ததற்கு பாஜக ஆட்சியின் ஊழலே காரணம் என காங்கிரஸ் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மகாராஷ்டிரத்தில் தொடர் மழை பெய்து வருவதால் மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக சிலை விழுந்ததாக பாஜக தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. மேலும், சத்ரபதி சிவாஜி சிலை வெறும் சிலை மட்டுமல்ல, தங்களுக்கு தெய்வம் போன்றது என்றும், அந்த தெய்வத்திடம் (சத்ரபதி சிவாஜி ) மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

இதையும் படியுங்கள் : சென்னை #F4 கார் பந்தயத்தின் 2வது நாள் தகுதிச்சுற்று – இந்தியாவின் மெக்பெர்சன் முதலிடம்!

இந்நிலையில், சிவாஜி சிலை இடிந்து விழுந்த விவகாரத்தில் மாநில அரசைக் கண்டித்து மகா விகாஸ் அகாதி கூட்டணியைச் சேர்ந்த கட்சியினர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோம், சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் தலைமையில் பேரணித் தொடங்கியது. தெற்கு மும்பையில் உள்ள ஹுதாத்மா சௌக்கில் தொடங்கிய பேரணி, இந்தியா நுழைவாயில் வரை நடைபெறவுள்ளது.

Tags :
DemolitionissueOppositionShivajiMaharajstatue
Advertisement
Next Article