‘தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திர பவார்' கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் சரத்பவார்!
தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திர பவார் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் தேசியத் தலைவர் சரத்பவார்.
இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏப்.19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் நாட்டில் உள்ள 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடந்து முடிந்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மத்தியில் ஆளும் பாஜகவின் சார்பில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல எதிர்கட்சிகள் சார்பில் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திர பவார் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அக்கட்சியின் தலைவர் சரத் பவார் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் மகாராஷ்டிரா மாநிலத் தலைவர் ஜெயந்த் பாடீல் தெரிவித்ததாவது..
“ எங்கள் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகிறோம், தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள விஷயங்ளை எங்கள் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் எழுப்புவார்கள்.
நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது, விவசாயிகள் மோசமான நிலையில் உள்ளனர், வேலையின்மை உச்சத்தில் உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில், மத்திய அரசின் விசாரணை ஏஜென்சிகளின் தவறான பயன்பாடு மற்றும் தனியார்மயமாக்கல் போன்ற பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன.