Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பொன்ராம் இயக்கத்தில் #ShanmugaPandiyan நடிக்கும் படம் - வெளியான அப்டேட்!

06:11 PM Aug 26, 2024 IST | Web Editor
Advertisement

பொன்ராம் இயக்கத்தில்  சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

Advertisement

சகாப்தம், மதுரை வீரன் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து, மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் மூன்றாவதாக வெளியாக இருக்கும் திரைப்படம் ‘படை தலைவன்’. அன்பு இந்த திரைப்படத்தை இயக்கும் நிலையில், இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா இந்த திரைப்படத்துக்கு இசையமைக்கிறார்.

இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.  இந்த நிலையில் சண்முக பாண்டியன் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படத்தை பிரபல இயக்குநர் பொன்ராம் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் திறமை மிக்க இயக்குனராக இருப்பவர் பொன்ராம். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் மற்றும் சூரியை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் ,  மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து ரஜினி முருகன், சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டி.எஸ்.பி போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கினார். இந்த நிலையில்தான் தனது அடுத்த படத்தை சண்முக பாண்டியனை வைத்து இயக்கவுள்ளார். இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையக்கவுள்ளார். பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். பட தொகுப்பை தினேஷ் பொன்ராஜ் செய்கிறார்.

Tags :
Captain Vijaykanthdirector ponramponramShanmuga Pandiyanvijaykanth
Advertisement
Next Article