Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மார்க்சிஸ்ட் கம்யூ.மாநில செயலாளராக சண்முகம் தேர்வு!

06:02 PM Jan 05, 2025 IST | Web Editor
Advertisement

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

Advertisement

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர் தற்போது அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினராக உள்ளார். தமிழக மலைவாழ் மக்கள் சங்கம், விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவராக பதவி வகித்தவர் ஆவார்.

விழுப்புரத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டின் இறுதி நாளான இன்று, மாநாட்டு கூட்டம் நிறைவடைந்ததும், புதிய மாநில செயலாளரை தேர்ந்தெடுப்பதற்காக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த செயற்குழு கூடத்தில் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தொடர்ந்து 2 முறை தேர்வு செய்யப்பட்டு, கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இன்று வரை தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கும் மேலாக பதவியில் நீடித்து வந்தார்.

இந்நிலையில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் பதவிக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து விழுப்புரத்தில் இன்று நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் புதிய மாநில செயலாளரை தேர்வு செய்யும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் அக்கட்சியின் புதிய மாநில செயலாளர் பொறுப்பிற்கு பெ.சண்முகம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளார்.

Tags :
CPI(M)k balakrishnanShanmugamState Secretary
Advertisement
Next Article