கௌதம் கம்பீருக்கு தொகை குறிப்பிடாமல் காசோலை வழங்கிய ஷாருக்கான்?
10:10 PM May 26, 2024 IST
|
Web Editor
Advertisement
ஐபிஎல் தொடரில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக கம்பீர் தொடர்வதற்கு, அந்த அணியின் உருமையாளர் ஷாருக்கான் தொகை ஏதும் குறிப்பிடாமல் காசோலை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல்2024 மார்ச் 22ம் தேதி தொடங்கி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தமாக 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரில், நடப்பு சாம்பியன்ஸான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமலேயே வெளியேறியது. இது ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஐபிஎல் 2024 இறுதிப்போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.
புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் தேர்வு செய்யப்படவுள்ளதாகவும், கம்பீருக்கும் ஆர்வம் இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால், அவர் 100% உத்தரவாதம் இருந்தால் மட்டுமே விண்ணப்பிப்பதாகவும், இல்லையெனில் விண்ணப்பிக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள் : 28 ஆண்டுகளுக்கு பிறகு ரீரிலீஸ் ஆகும் ‘இந்தியன்1’!
Advertisement
இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளரும் பாலிவுட் நடிகருமான ஷாருக்கான், கௌதம் கம்பீரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக வைத்திருக்க விரும்புவதாக கூறியுள்ளார். அடுத்த 10 ஆண்டுகளுக்கு அணியில் ஆலோசகராக இருக்க கம்பீருக்கு ஷாருக்கான் தொகை ஏதும் குறிப்பிடாமல் காசோலை ஒன்றை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட கம்பீர் விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது. இருப்பினும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை விட்டு வெளியேறுவது குறித்து ஷாருக்கானுடன், கம்பீர் ஆலோசனை மேற்கொண்ட பிறகே இறுதியான முடிவு தெரிய வரும்.
Next Article