Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Tollywood-லும் பாலியல் தொல்லை | #ActressSamantha-வின் பதிவால் கிளம்பும் புதிய 'பூதம்'!

03:29 PM Aug 31, 2024 IST | Web Editor
Advertisement

மலையாள சினிமாவில் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்த பல நடிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தெலுங்கு சினிமாவிலும் பாலியல் தொல்லைகள் இருப்பதாக நடிகை சமந்தா பதிவிட்டுள்ளார்.

Advertisement

மலையாள திரையுலக்கில் சில நடிகர்கள், நடிகைகள் மற்றும் பெண் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக புகார் எழுந்தது. இதனையடுத்து இது தொடர்பாக ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை கேரள அரசு அமைத்தது. கடந்த 2019-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குழுவின் அறிக்கையை மாநில அரசு வெளியிடாமல் இருந்தது.

இதனைத் தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அறிக்கையின் அதிர்ச்சியூட்டும் விவரங்கள் கடந்த 19-ம் தேதி வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள திரையுலகை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரிடமும் இந்த அறிக்கை பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கேரள உயர்நீதிமன்றமும் அறிக்கையை சமர்பிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

நடிகை ரேவதி சம்பத் என்பவர் நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக  குற்றம் சாட்டினார். இது பலரிடமும் அதிர்ச்சியை உண்டாக்கியதை தொடர்ந்து பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா என்பவர் பிரபல மலையாள இயக்குநர் ரஞ்சித், சினிமா விவாதத்திற்காகத் தன்னை வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என குற்றம்சாட்டினார். இதன் பின்னர் மலையாள நடிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து நடிகர் சித்திக் ராஜிநாமா செய்தார். அதேபோல், கேரள கலாசித்ரா அகாடமியின் தலைவர் பொறுப்பிலிருந்தும் இயக்குநர் ரஞ்சித் விலகினார்.

இதற்கு நடுவில் நடிகைகள் ஒவ்வொருவராக, நடிகர்கள் தங்களுக்கு தந்த பாலியல் தொல்லைகளை அம்பலப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ், மணியம்பிள்ளை ராஜூ, நடிகர் இடவேள பாபு ஆகியோர் மீது நடிகை மினு முனீர் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.

இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து மலையாள நடிகர்கள் சங்க (அம்மா) தலைவர் மோகன்லால் உள்பட அனைத்து நிர்வாகிகளும் ராஜிநாமா செய்தனர். இதன் பின்னர் விசாரணைக் குழுவில் நடிகைகள் அளித்த புகாரின்  அடிப்படையில் நடிகர் சித்திக் , இயக்குனர் ரஞ்சித், நடிகர் முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட 7 பேர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் ஹேமா கமிட்டி அறிக்கையை நடிகை சமந்தா பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளதாவது..

"தெலுங்கு திரையுலகப் பெண்களாகிய நாங்கள் ஹேமா கமிட்டியின் அறிக்கையை வரவேற்கிறோம். கேரளாவில் வுமன் இன் கலக்ட்டிவ் சினிமா அமைப்பின் தொடர்ச்சியான முயற்சிகளை பாராட்டுகிறோம். இதே போல் தெலுங்கு திரையுலகில் பெண்களுக்கு ஆதரவாக வாய்ஸ் ஆஃப் வுமன் அமைப்பு 2019ல் உருவாக்கப்பட்டது. கேரளாவை போல் தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லை தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என தெலங்கானா அரசிடம் கோரிக்கை வைக்கிறோம். இந்த அறிக்கையை வெளியிடுவதன் மூலம் பெண்களுக்கு பாதுகாப்பான பணிச் சூழல் அமையும்" என்று சமந்தா தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/stories/samantharuthprabhuoffl/3446106392767838816

Tags :
Hema CommitteeHema Committee ReportJustice Hema Committee reportsamanthaTollywood
Advertisement
Next Article