திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அமர்வு தரிசனம் முற்றிலும் ரத்து.!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அமர்வு தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் மிகவும் பிரசித்திபெற்ற கோயில்களில் முக்கியமானது திருவண்ணாமலையார் கோயில் ஆகும். இந்தக் கோயில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் அழைக்கப்படுகிறது.
இந்தக் கோயில் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். மேலும் இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும். இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவரர் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகிறார்.
சபரிமலை ஐய்யப்பன் கோயில் சீசன் தொடங்கியுள்ளதால் திருவண்ணாமலை கோயிலில்
பக்தர்கள் கூட்டம் நிரம்பியுள்ளது. நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அமர்வு தரிசனம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் VVIP, ViP. உள்ளிட்ட அனைவருக்கும் அமர்வு தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் வருவதாலும், பக்தர்களின் நலன் கருதியும், விரைவாக தரிசனம் செய்யும் வகையில் கோயில் நிர்வாகம் சார்பில் அமர்வு தரிசனம் இன்று முதல் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவிதுள்ளது.