Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தீவிரமாகும் #Kodanad கொலை கொள்ளை வழக்கு - சயான் உள்ளிட்ட 12 பேரின் வங்கி கணக்கு பரிவர்த்தனைகள் குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை!

05:05 PM Sep 05, 2024 IST | Web Editor
Advertisement

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் கைது செய்யபட்டு தற்போது ஜாமினில் உள்ள சயான் உள்ளிட்ட 12 பேரின் வங்கி கணக்கு பரிவர்த்தனை விவரங்களை கேட்டு சம்பந்தபட்ட தேசிய வங்கிகளுக்கு சிபிசிஐடி போலிசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

Advertisement

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் முதல் குற்றவாளியான கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் தற்போது சயான், வாளையாறு மனோஜ், தீபு, ஜம்சீர் அலி, சதீசன், பிஜின் குட்டி, உதயகுமார், மனோஜ்சாமி, சந்தோஷ்சாமி, ஜித்தின் ஜாய் ஆகியோரும் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் உள்பட12 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களை சிபிசிஐடி போலிசார் நேரில் அழைத்து விசாரித்து உள்ளனர். அப்போது அவர்களது வங்கி கணக்கு எண்களையும் பெற்றுள்ள சிபிசிஐடி போலிசார் சம்பந்தபட்ட வங்கிகளுக்கும், கோவையில் உள்ள தேசிய மயமாக்கபட்ட வங்கிகளுக்கும் கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்ற 2017 ஏப்ரல் 23-ந்தேதி முதல் தற்போது வரை இவர்களது வங்கி கணக்கில் நடைபெற்றுள்ள பண பரிவர்த்தனை விபரங்களை வழங்குமாறு நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், அவர்களது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்களின் வங்கி பரிவர்த்தனை விவரங்களையும் கேட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags :
CBCIDKodanad casekodanad estateMadras High Courtnews7 tamilTN Police
Advertisement
Next Article