செப்.5 வங்கக் கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு! #IMD எச்சரிக்கை!
செப்.5ஆம் தேதி வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது;
வடமேற்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இப்போது வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய அரபிக்கடலில் உள்ளது. இது தொடர்ந்து தெற்கு -தென்மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழந்து, அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும்.
விதர்பா மற்றும் சுற்றுப்புறத்தின் மத்திய பகுதிகள் மீது நன்கு குறிக்கப்பட்ட, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கிறது. இது நகர வாய்ப்புள்ளது. இது கிட்டத்தட்ட வடமேற்கு திசையில் விதர்பா மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்தியப் பிரதேசத்தின் குறுக்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கிறது.
வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளது.