Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு! தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

05:35 PM Aug 12, 2024 IST | Web Editor
Advertisement

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. 

Advertisement

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். முதன்மை நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்காத நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறையிடம் "செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்கில் எத்தனை சாட்சிகள் உள்ளன" என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை, முதல் வழக்கில் 21 சாட்சிகளும், 2வது வழக்கில் 100 சாட்சிகளும், 3-வது வழக்கில் 200 சாட்சிகளும் உள்ளதாக தெரிவித்தது. தொடர்ந்து, "செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணை எப்போது நிறைவடையும்?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை, தமிழ்நாடு அரசு விசாரணையை தாமதப்படுத்துவதாகவும், வாய்தா கேட்காவிட்டால் 3 மாதங்களுக்குள் விசாரைணையும் நிறைவடையும் எனவும் தெரிவித்தது.

தொடர்ந்து, செந்தில் பாலாஜி தரப்பில், "செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி மற்றும் அதிகாரத்தில் இல்லை என்பதை கவனத்தில் கொண்டு ஜாமீன் தர வேண்டும். விசாரணை நிறைவு பெறும் வரை ஒருவரை சிறையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் தெரிவித்திருக்கிறது.

செந்தில் பாலாஜி 300 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பதையும் கவனித்தில் கொள்ள வேண்டும்" என்று வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Tags :
DMKEDEnforcement DirectoratSenthil balajiSupreme court
Advertisement
Next Article