Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மாணவர்களின் பசி தீர்க்கும் செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ் அரசு பள்ளி ஆசிரியர்கள்!

04:15 PM Jan 05, 2024 IST | Web Editor
Advertisement

மாணவர்களின் பசி தீர்க்கும் செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

Advertisement

செங்கோட்டையில் உள்ள எஸ்.எம்.எஸ்.எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளில் சுமார் 950 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.  இவர்களில் சிலர் காலையில் உணவு சாப்பிடாமல் வருவதை அறிந்த ஆசிரியர்கள் தலைமை ஆசிரியரிடம் இந்த தகவலை தெரிவித்து இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்திருக்கிறார்கள்.  அதன்படி தேவையான மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவது என்றும் இதற்கான செலவுகளை ஆசிரியர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வது என்றும் தீர்மானித்தார்கள் .

இதன்படி கடந்த ஒன்றரை மாதங்களாக மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.  சுமார் 100 மாணவர்கள் பசியாறி வருகின்றனர்.  உணவுக்காக காலதாமதமாக மாணவர்கள் வருவதை குறைப்பதற்கும்,  பசியோடு இல்லாமல் படிப்பில் கவனம் செலுத்துவதற்கும் மாணவர்களுக்கு உதவும் இந்த ஆசிரிய பெருமக்களுக்கு பாராட்டுகள் குவிய தொடங்கியுள்ளது.

மேலும்,  இந்த ஆசிரியர்களின் சேவை உணர்வை மனதில் கொண்டு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவு திட்டத்தை அரசு விரிவாக்கம் செய்ய வேண்டும் என கல்வியாளர்கள் தரப்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags :
Break Firstgovt schoolmorning foodnews7 tamilNews7 Tamil UpdatesShenkottaistudentsTeachers
Advertisement
Next Article