Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து ஸ்மோக்கிங் பிஸ்கட் உள்ளிட்ட உணவுகள் விற்பனை செய்தால் நடவடிக்கை பாயும்!” - உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை!

10:03 PM Apr 25, 2024 IST | Web Editor
Advertisement

திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனைசெய்யும் உணவு வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Advertisement

அண்மையில் கர்நாடகாவில் நைட்ரஜன் ஐஸ் கலந்து உருவாக்கப்பட்ட ஸ்மோக்கிங் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன் பிஸ்கெட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

திரவ நைட்ரஜனை பிஸ்கெட் உடன் சேர்த்து சாப்பிடும் போது வாய் மற்றும் மூக்கில் இருந்து புகை வரும்.  இதை பொழுதுபோக்கான உணவாக பல்வேறு பொது இடங்களில் மற்றும் சுற்றுலா தளங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  பொருட்காட்சிகளில் நைட்ரஜன் பிஸ்கெட் விற்பனை செய்யப்பட்டுவதை பார்க்க முடிகிறது.  திரவ நிலையில் மைனஸ் 196 செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கும் திரவ நைட்ரஜன் பிஸ்கெட்டில் சேர்த்து பயன்படுத்துவது ஆபத்து என்கின்றனர் உணவுத்துறை வல்லுநர்கள்.

இதையும் படியுங்கள் : “காற்று அசைவதால் நமது தேசிய கொடி பறப்பதில்லை” – மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்திய நடிகர் சிவகார்த்திகேயன்!

இது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை சார்பில் அறிக்கை ஒரு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :

"உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் ஒழுங்குமுறைகள் 2011-ன்படி திரவ நைட்ரஜன் ஒரு செயலாக்க உதவியாக உறைதல் தன்மையுள்ள பொருட்களான பால் சார்ந்த இனிப்பு வகைகள் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற உணவு பொருட்களில் உறைதல் பணியினை மேற்கொள்ள மட்டுமே உதவுகிறது.

மேலும் திரவ நைட்ரஜன் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (உணவு பொருட்கள் தரம் மற்றும் உணவு சேர்க்கைகள்) ஒழுங்குமுறை, 2011 இன் படி Packing Gas மற்றும் Freezant ஆக மட்டுமே பயன்படுத்த முடியும்.

எனவே உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம் 2006, பிரிவு 38(10)-ன்படி உணவு பாதுகாப்பு துறையை சேர்ந்த நியமன அலுவலர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பிஸ்கட், ஐஸ்கிரீம், வேபர் பிஸ்கட் போன்ற உணவு பொருட்களுடன் திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம், 2006-ன்படி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்"

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Tags :
#FoodsafetycancelledliquidnitrogennitrogenSearchsmokebiscuitTamilNadu
Advertisement
Next Article