Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பொறுப்பு சார்பதிவாளரிடமிருந்து ரூ.11 லட்சம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத் துறை தீவிர விசாரணை!

07:44 AM Jun 21, 2024 IST | Web Editor
Advertisement

திருவள்ளூரில் உரிய ஆவணமின்றி பொறுப்பு சார்பதிவாளர் கொண்டு சென்ற ரூ. 11 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம் சார்பதிவாளர் அலுவலகத்தில்
பணிபுரிபவர் ஸ்ரீதரன். இவர் தற்போது விடுப்பு எடுத்துள்ளார். ஆகையால் இவருக்கு பதிலாக பேரம்பாக்கத்தைச் சார்ந்த ஆர் பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் மோகன்ராஜ் என்பவரை பள்ளிப்பட்டு சார் பதிவாளராக, பொறுப்புசார்
பதிவாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை பணி முடித்துவிட்டு சொகுசு காரில் வீட்டிற்கு புறப்படும் பொழுது இவரது காரை மடக்கி சந்தேகத்தின் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது சொகுசு காரில் மறைத்து வைத்திருந்த ரூ. 11 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.
இந்த பணம் ஏது என்று பொறுப்பு சார்பதிவாளர் மோகன்ராஜிடம் லஞ்ச ஒழிப்புத்துறை
போலீசார் கேள்வி எழுப்பினர். அதற்கு இந்த பணம் என்னுடையது அல்ல என அவர் மறுத்துள்ளார்.

இதனையடுத்து சார் பதிவாளர் அலுவலகத்திற்கு மோகன்ராஜை அழைத்துச் சென்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். அப்போதும் இந்த பணம் என்னுடையது இல்லை என்று பொறுப்பு சார்பதிவாளர் மோகன்ராஜ் தெரிவித்தார்.  இந்த பணத்திற்கான உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அவருக்கு தெரிவித்துள்ளனர். பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

சட்டத்திற்கு புறம்பான இந்த பணம் எப்படி வந்தது? யார் மூலம் வந்திருக்கும் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பள்ளிப்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
BriberyCrimeSub RegistrarVigilance Commission
Advertisement
Next Article