Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“தானே பேசி தானே சிரிப்பவர் சீமான்” - நாஞ்சில் சம்பத் விமர்சனம்!

தானே பேசி தானே சிரிப்பவர் சீமான் என்று திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் விமர்சனம் செய்துள்ளார்.
01:13 PM Feb 20, 2025 IST | Web Editor
Advertisement

விசிக சார்பில் ஈரோட்டில் நேற்று (பிப்.20) ‘இது பெரியார் மண்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு, ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி. சந்திரகுமார், திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் பங்கேற்று உரையாற்றினர்.

Advertisement

அப்போது நாஞ்சில் சம்பத் பேசியதாவது, “காலை சுற்றிய பாசிசம் கழுத்தை சுற்றி எச்சரிக்கும் காலமாக இன்று உள்ளது. பெரியாரைக் கொச்சைப்படுத்தி கல் எறிந்தால்தான் பிழைப்பு நடத்த முடியும் என நாம் தமிழர் கட்சி இருக்கிறது. பெரியாரை தொடர்ந்து விமர்சனம் செய்தால் எதிர்வினை ஆற்ற எங்களால் முடியும்.

பெரியார் மறைந்து 53ஆண்டுகள் கடந்த நிலையில் சீமான் விமர்சனம் செய்வது ஏன்? பெரியார் வரலாற்றைப் பற்றி பேசினால் ஏதாவது பதில் சொல்ல முடியும்.  அதைவிட்டுவிட்டு சீமான் பொய் பேசுகிறார். சீமான் சோற்றுக்காக பெரியாரை மாசுபடுத்துகிறார். திராவிட இயக்கத்தை பாஜக குறி வைக்க காரணம் பெரியார் அவ்வியக்கத்தை வழிநடத்தி செல்வதால்தான்.

திராவிடம் மற்றும் தமிழ் தேசியம் குறித்து ஒரே மேடையில் விவாதம் செய்ய சீமான் தயாரா? எதையும் படிக்காமல் பெரியாரை மொய்க்கும் கூட்டம் உள்ளது.  நாம் தமிழர் கட்சியின் தொண்டர்களை நான் மதிக்கிறேன். ஆனால், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து 400கோடி ரூபாயும், 300கோடி ரூபாய் பாஜகவிடம் இருந்து சீமான் வாங்கினார்.

தானே பேசி தானே சிரிக்கும் பழக்கம் சீமானிடம் உள்ளது. பெரியார் பற்றி கொச்சையாக பேசியதற்கு சீமானிடம் ஆதாரம் இருக்கிறதா? பிரபாகரனை சீமான் சந்தித்தாராம். சந்தித்தவர்கள் யாரும் சொல்லவில்லை.  மதிமுக தலைவர் வைகோ பாஸ்போர்ட் இல்லாமல் தேசம் கடந்து பிரபாகரனை சந்திக்கச் சென்றார். பழ நெடுமாறன்  இதுவரை பிரபாகரன் சந்தித்ததாக சொன்னது இல்லை.

உலகத்தில் நிகரற்ற வீரர்  பிரபாகரன்தான். ஆமைக்கறி கொடுக்க அவர் என்ன சமையல்காரரா? சீமான் சந்தித்ததற்கு ஆதாரம் இருக்கிறதா? தமிழ் தேசிய தேவை குறித்து சீமான் அவரிடம் பேசியது உண்டா?

சீமான் பாஜகவின் கைக்கூலி என்று 10வருடமாக சொல்லி வருகிறேன். தடை செய்யப்பட்ட இயக்கத்தின் கொடியை சீமான் தனது கட்சி கொடியில் பயன்படுத்த
மோடி இன்னும் அனுமதிக்க காரணம் என்ன? அதுவே ஈரோட்டில் நான் தடை செய்யப்பட்ட இயக்கத்தை பேசினால் தேசிய புலனாய்வு முகமை என்னை விடுவார்களா?.  நாம் தமிழர் கட்சிக்கு என்ன திட்டம் இருக்கிறது?. தனித்து நின்றால் மட்டும் என்ன?. 234தொகுதிகள் இல்லை. 400தொகுதிகள் இருந்தாலும் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடுவார். ஏனென்றால் சீமானுக்கு வசூல்தான் நோக்கம்.

பாஜகவுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காது. கிடைக்க விடமாட்டோம். முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லும் 200 தொகுதிகளைவிட 234தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும். பானையே உடையவில்லை. அப்படி இருக்கும் போது கூட்டணி எப்படி உடையும்.  இந்தியா கூட்டணி முகம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் என்றால் முதுகெலும்பு தந்தவர் திருமாவளவன் எம்.பி. சானதான சக்திக்கு  இடமில்லை. அதிகாரத்தை எப்படி பயன்படுத்தினாலும் பயப்பட மாட்டோம்.  பெரியார் கொள்கையை மீட்டு எடுக்க உயிரை விடத் தயார். 100ஆண்டுகள் கடந்தும் பெரியார் வாழ்வார்”

இவ்வாறு திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேசினார்.

Tags :
Nanjil SampathNTKperiyarSeemanVCK
Advertisement
Next Article