Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இரண்டாவது டி 20 போட்டி ; டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு...!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
07:06 PM Dec 11, 2025 IST | Web Editor
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
Advertisement

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில், டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணியும் ஒரு நாள் தொடரை இந்திய அணியும் கைப்பற்றியுள்ளன.

Advertisement

இதனை தொடர்ந்து டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் டி 20 போட்டியில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை விழ்த்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி 20 போட்டியானது, இன்று பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்யவுள்ளது.

அணி விவரம்:

இந்தியா ; அபிஷேக் சர்மா, ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, ஷிவம் துபே, ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அக்‌ஷர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங்.

தென் ஆப்பிரிக்கா ; ரீசா ஹென்ட்ரிக்ஸ், குயின்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), எய்டன் மார்க்ரம்(கேப்டன்), டெவால்டு ப்ரீவிஸ், டேவிட் மில்லர், டொனோவன் ஃபெரீரா, ஜார்ஜ் லிண்டே, மார்கோ யான்சன், லூத்தோ சிபம்லா, லுங்கி இன்கிடி, ஒட்னீல் பார்ட்மேன்.

 

Tags :
2ndt20IndVsSAlatestNewsSportsNewsToss
Advertisement
Next Article