இரண்டாவது ஒரு நாள் போட்டி ; சதம் விளாசி அசத்திய கோலி, ருதுராஜ்...!
தென்னாப்பிரிக்கா - இந்தியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், ரோகித் ஆகியோர் 22 மற்றும் 14 ஆகிய ரன்களுக்கு அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ருதுராஜ் கெய்க்வாட் 77 பந்துகளில் சதம் விளாசி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். கெய்க்வாட் 83 பந்துகளில் 105 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார்.
அதே போல், மறுமுனையில் நிலைத்து விளாடிய நட்சத்திர வீரர் விராட் கோலி 90 பந்துகளில் சதம் விளாசினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இது அவரது 53 வது சதமாகும். கோலி 93 பந்துகளில் 102 ரன்கள் எடுத்த நிலையில் லுங்கி நிகிடி பந்தில் அவுட் ஆனார்.